பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு இல்லை

சத்தியமங்கலம், ஜூலை 12: சத்தியமங்கலம் சாரு மெட்ரிக் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.  முகாமில் சத்தியமங்கலம் சார்பு நீதிபதி ஈஸ்வரமூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:மாணவர்கள் சட்டத்தை தெரிந்து கொள்ள வேண்டும். சட்டவிதிகளை மாணவர்களிடம் எடுத்து சொல்லுங்கள் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பள்ளி மாணவர்களுக்கு சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மாணவர்கள் சட்டவிதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் இன்றி மாணவர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோர் தண்டிக்கப்படுவார்கள். கரு உருவாவது முதல் கல்லறை வரை சட்டத்தின்படி செயல்பட வேண்டும். படிப்பறிவு இல்லை என தவறு செய்தால் சட்டப்படி தவறு. அதனால் பாமரரும் பள்ளி மாணவர்களும் சட்டத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் படிக்கும் காலத்தில் நீதிபோதனை என்ற வகுப்பு நடத்தப்பட்டது. அதில், நல்லொழுக்கும் கற்பிக்கப்பட்டது. தற்போது அது போன்ற வகுப்புகள் இல்லாததால் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.இதில், சத்தியமங்கலம் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: