உறையூர், புத்தூர் பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருச்சி, ஜூலை 12: உறையூர், புத்தூர் பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 52வது வார்டு ஆனந்தம் நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 53வது வார்டு செல்வநகர் மற்றும் ரெயின்போ நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு கொள்ளிடம் 3வது கிணறு நீரேற்றும் நிலையத்திலிருந்து கொள்ளிடம் குடிநீர் ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், கத்திரிக்காய் வாய்க்கால் பாலத்தின் வழியே செல்லும் மெயின் குழாயில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அதை சரி செய்யும் பொருட்டு, இன்று பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நாளை ஒரு நாள் மட்டும் கோ.அபிஷேகபுரம் கோட்டத்துக்குட்பட்ட உறையூர், மங்களா நகர், பாத்திமாநகர், சிவா நகர், ரெயின்போ நகர், செல்வா நகர், ஆனந்தம் நகர், பாரதி நகர், புத்தூர் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. மறுநாள் 14ம் தேதி வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: