அகழியை ஆக்கிரமித்த கோரை புற்கள் கும்பகோணம் பக்தபுரி தெருவில் தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

கும்பகோணம், ஜூலை 12: கும்பகோணம் நகராட்சி அலுவலகம் பின்புறம் பக்தபுரி தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளின் கழிவுநீர் செல்வதற்கு பாதாள சாக்கடை குழாய் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பாதாள சாக்கடை குழாயை பராமரிப்பு செய்யாததால் அடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த தெருவில் உள்ள அனைத்து வீடுகளின் பாதாள சாக்கடைக்கு வரும் கழிவுகள் அனைத்தும் நகராட்சி அலுவலகம் முன் தேங்கியது. பின்னர் கடந்த 6 மாதமாக தேங்கியிருப்பதால் தற்போது குட்டை போல் ஆனது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும், கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் மாறியுள்ளது.இதுகுறித்து அக்குடியிருப்பு வாசிகள், நகராட்சி அலுவலகத்தில் புகாரளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் குடியிருப்புகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி அலுவலகம் பின்புறம் தேங்கியுள்ள கழிவுநீர் குட்டைகளை உடனடியாக சுத்தப்படுத்தி சுகாதாரமாக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பிரபு கூறுகையில், பாதாள சாக்கடை குழாயை சீர் செய்யாததால் அடைப்பு ஏற்பட்டது.

இதனால் குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீர் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் புகாரளித்தால் பாதாள சாக்கடை சுத்தம் இயந்திரத்தின் குழாய் சிதிலமடைந்து விட்டது. மேலும் போதுமான ஆட்கள் இல்லாமல் உள்ளனர் என்கின்றனர். கும்பகோணம் நகராட்சியில் பெரும்பாலான வார்டுகளில் பாதாள சாக்கடை மேன்ஹோலில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. கடந்த 6 மாதமாக கழிவுநீர் மற்றும் கழிவு குப்பைகள் தேங்கி இருப்பதால் துர்நாற்றமும், கொசுக்கள் உற்பத்தியாகும் கூடாரமாகியுள்ளது.இதுபோன்ற சுகாதாரமற்ற கழிவுநீர் குட்டையால் நிலத்தடியில் இருந்து வரும் தண்ணீர் துர்நாற்றம் ஏற்படுகிறது. மேலும் பகல், இரவு நேரங்களில் கொசுக்களின் தொல்லையால் தினம்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் 5க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கும்பகோணம் நகராட்சி அலுவலக பின்புறம் உள்ள கழிவுநீர் குட்டையை சுத்தப்படுத்தி சுகாதாரமாக்க வேண்டும் என்றனர்.

Related Stories: