குடிநீர் பிரச்னைகளை உடனுக்குடன் சரி செய்து ஊராட்சி செயலாளர்கள் கொண்டு வரும் பட்டியல் தொகையை வழங்க வேண்டும்

தஞ்சை, ஜூலை 12: தற்போது நிலவும் வறட்சி காரணமாக குடிநீர் பிரச்னைகளை உடனுக்குடன் சரி செய்து ஊராட்சி செயலாளர்கள் கொண்டு வரும் பட்டியல் தொகையை தாமதமின்றி, நிலுவையின்றி உடனடியாக ஆய்வு செய்து விடுவிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தஞ்சை அருகே கீழக்கோவில்பத்து சேவை மையத்தில் அம்மாபேட்டை ஒன்றிய ஊராட்சி செயலாளர்கள் கூட்டம் நடந்தது. சங்க தலைவர் பாலசந்தர் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.

Advertising
Advertising

கூட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக குடிநீர் பிரச்னைகளை உடனுக்குடன் சரி செய்து ஊராட்சி செயலாளர்கள் கொண்டு வரும் பட்டியல் தொகையை தாமதமின்றி, நிலுவையின்றி உடனடியாக ஆய்வு செய்து விடுவிக்க மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2019 20ம் ஆண்டுக்கான ஊராட்சி பதிவேடுகள் வாங்கியதற்கு மதுரை கூட்டுறவு அச்சகத்துக்கு வழங்க வேண்டிய பட்டியல் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

அம்மாபேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவை தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும். தொடர்ந்து 10 மற்றும் 20 ஆண்டுகள் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்புநிலை, தேர்வுநிலை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதிகாரிகளுக்கு உத்தரவு

Related Stories: