ஏர்இந்தியா விமானத்தில் அணிவகுத்த எறும்புகள்: 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது

புதுடெல்லி: டெல்லியில் இருந்து லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் எறும்புகள் சாரை சாரையாய் தென்பட்டதால், விமானம் புறப்படுவதில் 3 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் (ஏஐ -111) நேற்று பிற்பகல் 2 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் பூடான் இளவரசர் ஜிக்மி நம்க்யல் வாங்க்சக் உள்ளிட்ட பயணிகள் பயணிக்க இருந்தனர். விமானம் புறப்பட சிறிது நேரம் இருந்த நிலையில் பிசினஸ் வகுப்பில் எறும்புகள் சாரை சாரையாய் இருந்தது தெரியவந்தது. இதனால் விமானத்தை சுத்தம் செய்ய பணியாளர்கள் முயன்றனர். ஆனால் முடியவில்லை.இதனால், வேறு போயிங் 787-8 விமானம் கொண்டு வரப்பட்டு, அதில் பயணிகள் மாற்றப்பட்டனர். இதனால் 3 மணி நேரம் தாமதமாக மாலை 5.20 மணிக்கு விமானம் லண்டன் புறப்பட்டு சென்றது. ஏற்கனவே கடந்த மே 27ம் தேதி டெல்லியிலிருந்து அமெரிக்காவின் நிவார்க் நகருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு பறந்ததும், விமானத்தில் வவ்வால்கள் பறந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் விமானம் மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டு, வவ்வால் அப்புறப்படுத்தப்பட்ட பின் கிளம்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது….

The post ஏர்இந்தியா விமானத்தில் அணிவகுத்த எறும்புகள்: 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: