மேட்டூர், ஜூன் 27: பொட்டனேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக, வசந்தி ஆடலரசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேட்டூர் அருகே பொட்டனேரியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 7,627 உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தபோது, இச்சங்கத்திற்கும் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக, உறுப்பினர் ஒருவர் நீதிமன்றம் சென்றதால், இச்சங்கத்திற்கு கடந்த வாரம் தேர்தல் நடத்தப்பட்டது. பொதுத்தேர்தல் போலவே, காலை முதல் மாலை வரை பரபரப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வசந்தி ஆடலரசன், செல்வராஜ், தைலப்பன், ரஞ்சித்குமார், ரவீந்திரன் மற்றும் பாலசுப்லீரமணியன் ஆகிய 6பேர் தேர்வு செய்யப்பட்டனர்.