மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம்; ₹2 லட்சம் நலத்திட்ட உதவி

நாமக்கல்,  ஜூன் 27: நாமக்கல்லில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி  நாள் முகாமில், 31 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட  உதவிகளை  கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.நாமக்கல் மாவட்ட  கலெக்டர்அலுவலக வளாகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை  சார்பில்  மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் கலெக்டர் ஆசியா  மரியம் தலைமையில் நேற்று நடைபெற்றது.  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை  சேர்ந்த ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, வங்கி கடன், பெட்ரோல்  ஸ்கூட்டர், வேலை வாய்ப்பு, அடையாள அட்டை, மாதாந்திர உதவித்தொகை, தையல்  இயந்திரம், காதொலி கருவி, வீட்டுமனைப் பட்டா, கல்வி உதவித்தொகை, திருமண  உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் இதர உதவிகள் என 70க்கும் மேற்பட்ட  கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

முகாமில்10  மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்கான  உத்தரவு ஆணை, 10 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டைகள், 3  பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள், 2 பேருக்கு பேட்டரியால் இயங்கும்  மடக்கு சக்கர நாற்காலிகள், 2 பேருக்கு ஊன்றுகோல், 4 பேருக்கு மடக்கு சக்கர  நாற்காலிகள் என மொத்தம் 31 பயனாளிகளுக்கு ₹2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட  உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.இந்த முகாமில்  தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் துரை, மாவட்ட  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன்  மற்றும் பல்வேறு அரசுத்துறை  அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: