விக்ரமம் கிராமத்தில் நீராபானம் தயாரித்தல் பயிற்சி

பட்டுக்கோட்டை, ஜூன் 27: பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் வட்டாரம் விக்ரமம் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு தென்னையில் நீராபானம் தயாரித்தல் குறித்த பயிற்சி நேற்று நடந்தது. மதுக்கூர் வட்டார வேளாண்மை அலுவலர் நவீன்சேவியர் வரவேற்றார். மதுக்கூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி தலைமை வகித்து பேசுகையில். தற்போதுள்ள சூழ்நிலையில் விவசாயிகள் வாழ்வாதரத்தை மேம்படுத்தி கொள்ள பயிர் சாகுபடி செய்வது மட்டும் போதாது. சந்தைக்கேற்ப உற்பத்தி முறையை மாற்றியமைத்து விவசாயிகள் தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.பட்டுக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை வேளாண் அலுவலர் தாரா பங்கேற்று நீராபானம் தயாரிப்பு முறை, மரம் தேர்வு உரிமம் பெறும் முறை, குழுக்கள் அமைத்தல், நீராபானத்தை பதப்படுத்துதல், தென்னை வெல்லம் தயாரித்தல், நீராபானத்தில் உள்ள ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் நீராபானம் பயன்பாட்டு முறைகள் குறித்து விளக்கினர்.பயிற்சியில் மதுக்கூர் வட்டார வேளாண்மை துணை அலுவலர் கலைச்செல்வன், மதுக்கூர் வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள், பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் பங்கேற்றனர். அட்மா திட்ட அலுவலர் லீலா நன்றி கூறினார்.

Related Stories: