பொதுமக்கள் பாராட்டு 8 ஆண்டுகளுக்கு பிறகு சோழியவிளாகம் மாரியம்மன் கோயிலில் திருவிழா நடத்த பொதுமக்கள் முடிவு

கும்பகோணம், ஜூன் 27: திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் சோழியவிளாகத்தில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த கோயிலில் அனைத்து சமூக மக்களுக்கும் வழிபட்டு வந்தனர்.இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது நடந்த சுவாமி வீதியுலாவின்போது இருபிரிவினருக்கு பிரச்னை ஏற்பட்டது. அப்போது இருந்த திருவிடைமருதூர் தாசில்தார் காமராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கம்போல் அனைத்து சமூகத்தினர் குடியிருப்பு பகுதிகளுக்கும் சுவாமி ஊர்வலம் செல்ல வேண்டுமென பேசி முடிக்கப்பட்டது. ஆனால் ஒரு பிரிவினர் பேச்சுவார்த்தைக்கு உடன்பாடு ஏற்படாததால் கடந்த 8 ஆண்டுகளாக திருவிழா நடக்காமல் பூட்டியே கிடந்தது.இந்நிலையில் சோழியவிளாகத்தில் உள்ள முக்கிய நபர்கள் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அனைத்து சமூக மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கும் சுவாமி ஊர்வலம் கொண்டு செல்வதென முடிவெடுத்து திருவிழாவை நடத்த முடிவு செயதனர்.

Related Stories: