விழிப்புணர்வு பேரணியில் தகவல் பாலைவனமாக மாறிய குடமுருட்டி ஆறு ஒரத்தநாடு பகுதியில் ஆம்புலன்ஸ் சேவை இல்லாத அவலம்

ஒரத்தநாடு, ஜூன் 27: ஒரத்தநாடு சுற்றுவட்டார பகுதியில் ஆம்புலன்ஸ் சேவை வசதி இல்லை. இதனால் விபத்தில் இறந்து போகும் உடல்களை விரைந்து ஏற்றி செல்ல முடியாமல் பொதுமக்கள், போலீசார் அவதிப்பட்டு வருகின்றனர்.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, பாப்பாநாடு, திருவோணம், வாட்டத்திக்கோட்டை ஆகிய காவல் நிலைய கட்டுப்பாட்டில் 250 கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியில் நடைபெறும் சாலை விபத்துகள் மற்றும் தற்கொலை சம்பவங்களால் இறந்து போகும் உடல்களை போலீசார் மீடடு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு விபத்து மற்றும் தற்கொலை, கொலை சம்பவங்களில் இறப்பவர்களின் உடல்களை வாகனங்களில் ஏற்றி கொண்டு வருவதற்கு ஒரத்தநாடு, திருவோணம், பாப்பாநாடு ஆகிய நகரங்களில் தனியார் அமதர் ஊர்தி வாகனமோ, அரசு அமரர் ஊர்தி வாகனமோ இல்லை. இதனால் இறந்து போனவர்களின் உடல்கள் அருகே போலீசார் பல மணி நேரம் காத்திருந்து தஞ்சையில் இருந்து வாகனங்களை வரவழைத்து ஒரத்தநாடு கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது. இதனால் இறந்த உடல்கள் அழுகி துர்நாற்றம் வீசும் அபாயம் ஏற்படுகிறது. எனவே ஒரத்தநாடு அரிமா சங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து சேவை மனப்பான்மையுடன் இறந்தவர்களின் உடலை ஏற்றி செல்வதற்கு வாகன சேவையை செய்துதர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், போலீசார் அவதி இறந்து போனவர்களின் உடல்கள் அருகே போலீசார் பல மணி நேரம் காத்திருந்து தஞ்சையில் இருந்து வாகனங்களை வரவழைத்து ஒரத்தநாடு கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது.

Related Stories: