அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம் முத்துப்பேட்டையில் தொடர் மின்வெட்டால் மக்கள் கடும் அவதி சீரமைக்க ஆட்டோ ஓட்டுனர்கள் மின்வாரியத்தில் மனு

முத்துப்பேட்டை , ஜூன் 26:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் சில தினங்களாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருநாளைக்கு அதிகபட்சம் சுமார் 50 முறை மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் ஒருநாளைக்கு ஏறக்குறைய சுமார் 4மணி நேரம் மின் வெட்டு உள்ளது. சில நேரங்களில் தொடர்ச்சியாக பலமணிநேரம் மின் தடை ஏற்பட்டுள்ளது.இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதில் குறிப்பாக இரவு நேரத்தில் முதியவர்கள். சிறுவர்கள் என அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.. இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் மின்தடை குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டும் தொடர் மின்வெட்டு இதுநாள் வரை சரி செய்யப்படவில்லை. இதனால் முத்துப்பேட்டை மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் முத்துப்பேட்டை செக்கடிகுளம் ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பில் அதன் செயலாளர் சேக்தாவுது மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் ஒன்று திரண்டு சென்று முத்துப்பேட்டை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் பிரபுவை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

அதில் கடந்த சில மாதங்களாக முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முன் அறிவிப்பு இன்றி அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இந்த மின் வெட்டால் வீட்டில் உள்ள, வியாபார தளங்களில் உள்ள மின் பொருள் சாதனங்கள் பழுதடைகிறது இதனால் மக்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படுவதோடு மின்வெட்டு காரணமாக வெப்பம் அதிக உள்ள நிலையில் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.ஆகையால் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்தட்டுப்பாட்டை நிறுத்துமாறு சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என அதில் தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மின் வாரிய உதவி செயற்பொறியாளர் பிரபு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories: