பிரதமரிடம் திமுக மனு

பள்ளிப்பட்டு, ஜூன் 25: பிரதமர் மோடியை, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் சந்தித்து  அளித்துள்ள மனுவின் விவரம்: குடிநீருக்காவும் அன்றாட பயன்பாட்டிற்கு தேவைப்படும் நீருக்காவும் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு குடம் தண்ணீர் கிடைப்பதே மிகவும் அரிதாகிவிட்டது. மேலும், ஒரு குடம் தண்ணீர் எடுக்க மக்கள் 5 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. அதுபோல, பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்குகிறார்கள்.  

எனவே, மத்திய அரசு போர்கால அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், ரயில் மூலம் அண்டை மாநிலத்தில் இருந்து தண்ணீர் கொண்டுவருவதும், ஒகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அரக்கோணம் தொகுதிக்கு செயல்படுத்தவும் வேண்டும். அதேபோல், பஞ்சாயத்து வாரியாக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க வேண்டும். கோதாவரி, கிருஷ்ணா, பாலாற்று நதியோடு இணைப்பதன் மூலமாக நிரந்தர தீர்வு காணமுடியும். அரக்கோணம் தொகுதி சார்பிலும், தமிழகத்தின் சார்பிலும் பிரதமர் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: