சட்டமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்

சரணாலய பகுதி என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை தான் சரணாலய பகுதிகளில் பணிகளை மேற்கொள்ள அனுமதி கொடுக்க வேண்டும். அந்த வகையில் பொதுப்பணித்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்தாலும் கூட, வனத்துறை தமிழக அரசின் மூலம் மத்திய அரசின் அனுமதி பெற்ற பிறகே சரணாலய பகுதிக்குள் தூர்வாரும் பணிக்காக வாகனங்கள் மற்றும் தொழிலாளர்கள் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. இதற்கிடையே இந்த விவகாரத்தை வரும் சட்டமன்ற கூட்ட தொடரில் குமரி மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் எழுப்ப வேண்டும். சட்டமன்றத்தில் வரும் 1ம் தேதி வனத்துறை மானிய கோரிக்கையின் போது இந்த பிரச்னையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Related Stories: