பாப்பம்பாடி வாரச்சந்தையில் வியாபாரிகளை மிரட்டி கூடுதலாக சுங்கம் வசூல்

ஓமலூர், ஜூன் 21: தாரமங்கலம் அடுத்த பாப்பம்பாடி வாரச்சந்தையில் வியாபாாிகளை மிரட்டி கூடுதலாக சுங்கம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

தாரமங்கலம் ஒன்றியம் பாப்பம்பாடி  கிராமத்தில், வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை சந்தை கூடுகிறது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்து காய்கறி மற்றும் பொருட்களை வாங்கிச்செல்கின்றனர்.  

இந்த  சந்தையில் சுங்கம் வசூலிப்பதற்கான ஏலம் நடத்தப்பட்டு வரிகள் உட்பட ₹30 லட்சம் குத்தகை தொகையாக ஒன்றியத்திற்கு  கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏலம் எடுத்தவர்கள் அரசு நிர்ணயத்தை கட்டணத்தை விட பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து சந்தையில் கடை வைத்துள்ள வியாபாரிகள்,  முதல்வரின் தனிப்பிரிவு, அரசு கூடுதல்  தலைமை செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். அதில், வாரச்சந்தையில் பலமடங்கு அதிகமாக சுங்க கட்டணம்  வசூலிப்பதாகவும், இதுகுறித்து கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: