சிஇஓ வலியுறுத்தல் புதுகை சத்ரு சம்ஹாரமூர்த்தி சித்தர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்

புதுக்கோட்டை, ஜூன் 21:புதுக்கோட்டை சத்ரு சம்ஹாரமூர்த்தி சித்தர் சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்களங் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை அரசு பொது அலுவலக வளாகத்தில் புதுக்கோட்டை தீயணைப்பு நிலையம் உள்ளது. இந்த தீயணைப்பு நிலையத்தின் அருகே அரண்மணை விநாயகர் ராஜகணபதி, சத்ரு சம்ஹாரமூர்த்தி சித்தர் சுவாமிகள் கோயில் உள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 18ம் தேதி காலை அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் முதற்கால யாகபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் 2ம் கால யாகபூஜையும், மாலையில் 3-ம் கால யாகபூஜையும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலையில் 4-ம்கால யாகபூஜை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜைகள் செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை கோயில் சிவாச்சாரியார்கள் கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோயில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

தொடர்ந்து அரண்மணை விநாயகர் ராஜகணபதி, சத்ரு சம்ஹாரமூர்த்தி சித்தர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை தீயணைப்பு நிலையம், கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories: