வாழப்பாடி வைகை மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

வாழப்பாடி.ஜூன்19: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் உள்ள வைகை கலை அறிவியல் மகளிர் கல்லூரியில், முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.  இந்த விழாவிற்கு வைகை கல்லூரியின் தலைவர் அய்யாவு  தலைமை வகித்தார். செயலர் கணேசன் முன்னிலை வகித்தார்.  கல்லூரியில் முதலாமாண்டில் சேர்ந்துள்ள மாணவிகளுக்கு மலர் கொடுத்து வரவேற்றனர். விழாவில் முதல்வர் டாக்டர் பிரகாஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்வி இயக்குனர் டாக்டர் வீரமணி, முதல்வர் சுப்ரமணி ஆகியோர் முதலாமாண்டு மாணவிகளுக்கு உயர் கல்வியின் முக்கியத்துவம், கல்லூரியின் நடைமுறை, எப்படி தேர்வினை எதிர் கொண்டு சிறந்த மாணவியாக திகழ வேண்டும் என்பதை பற்றி எடுத்துக்கூறினர்.   இதேபோல் மூன்றாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகளும், முதலாமாண்டு மாணவிகளை வரவேற்று மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியினை தமிழ்த்துறை தலைவர் கவுசல்யா தொகுத்து வழங்கினார். கணிதத்துறை தலைவர் நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: