புள்ளிமான் கிணற்றில் விழுந்து பரிதாப பலி

துறையூர், ஜூன் 19: துறையூர் அருகே அம்மாப்பட்டியில் 102 அடி ஆழ கிணற்றில் புள்ளிமான் தவறி விழுந்து பலியானது.துறையூரை அடுத்துள்ள அம்மாப்பட்டியை சேர்ந்தவர் முத்துச்செல்வன். இவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்நிலையில் துறையூர் அருகே இருக்கம் வனப்பகுதியிலிருந்து தண்ணீரை தேடி 2 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஊருக்கு வந்துள்ளது. அதை நாய்கள் துரத்தியது. அப்போது தப்பித்து ஓடுவதற்காக தாவியபோது முத்துச்செல்வன் தோட்ட கிணற்றில் மான் தவறி விழுந்தது. கிணற்றில் தண்ணீர் இருந்ததால் அதில் மான் தத்தளித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று புள்ளி மானை இறந்த நிலையில் மீட்டனர். மேலும் வனவர் சக்திவேலிடம் இறந்த புள்ளிமானை ஒப்படைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: