பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கோளரங்கில் கூடன்குளம் அணுஉலை மாதிரி திறப்பு

திருச்சி, ஜூன் 19: பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அண்ணா அறிவியல் மைய கோளரங்கில் கூடன்குளம் அணுஉலை மாதிரி திறக்கப்பட்டு ஒலி, ஒளி வடிவில் விளக்கம் அளிக்கப்படுகிறது.திருச்சி ஏர்போர்ட் அருகே அண்ணா அறிவியல் மைய கோளரங்கம் உள்ளது. இங்கு மும்பையிலிருந்து கூடங்குளம் அணு உலையின் மாதிரி கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டது. இதனை திட்்ட இயக்குநர் அகிலன் திறந்து வைத்தார். சிறப்பு அழைப்பாளராக என்பிசிஎல் முதுநிலை மேலாளர் ஜனா கலந்து அணு உலையின் இயக்கம், அதன் செயல்பாடுகள், பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். இதில் பள்ளி மாணவர்கள் 80க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்.கூடங்குளம் அணு உலை குறித்து சந்தேகங்களையும், அச்சத்தையும் போக்கும் வகையில் இங்கு ஆடியோ, வீடியோ வடிவில் 3 மொழிகளில் விளங்கங்கள் அளிக்கப்படும்.  இதன் மூலம் கூடன்குளம் அணுஉலை பற்றிய அச்சம் பொதுமக்களிடம் நீங்கும் என எதிர்பார்க்கிறோம் என்று திட்ட இயக்குநர் தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: