குளத்தில் அதிக ஆழத்தில் தோண்டி மண் எடுத்ததால் வாகனம் சிறைபிடிப்பு

கும்பகோணம், ஜூன் 19: கும்பகோணம் அடுத்த மேலக்காட்டூர் ஊராட்சியில் 10 ஏக்கரில் பிள்ளையார் கோயிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. இக்குளத்தில் கோயில் தெப்பம் விடுவதற்காக கோயில் நிர்வாகிகள், குளத்திலுள்ள மண்ணை கடந்த 10 நாட்களுக்கு மேலாக எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் குளத்தில் உள்ள மண்ணை எடுத்ததாலும், குளத்தில் அனுமதிக்கப்பட்ட ஆழத்தைவிட அதிகமாக தோண்டிய மண் அள்ளியதால் போலீசார், வருவாய்த்துறையிடம் அப்பகுதி மக்கள் தெரிவிததனர். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மேலக்காட்டூரை சேர்ந்த பொதுமக்கள், குளத்தில் மண் அள்ளி செல்லும் டிராக்டர் வாகனத்தை மறித்தனர். இதனால் மண் எடுப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Advertising
Advertising

தகவல் அறிந்ததும் பந்தநல்லுார் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதுகுறித்து திருவிடைமருதூர் தாசில்தார் சிவகுமார் கூறுகையில், மேலக்காட்டூர் விநாயர் குளத்தில் 3 அடி ஆழத்திற்கு மட்டும் மண் எடுக்க அனுமதியுள்ளது. அதைவிட ஆழத்தில் மண் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.சுடுகாட்டில் அதற்கான பணிகளை மட்டுமே செய்ய வேண்டும், குப்பைகளை வேறு எந்த பகுதியில் வேண்டுமானாலும் தரம் பிரித்து கொள்ளலாம், ஆனால் சுடுகாடை வேறு எங்கும் அமைக்க முடியாது.

Related Stories: