தஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டுக்கு வட்டியில்லா பயிர் கடன் ரூ.311 கோடி நிர்ணயம்

தஞ்சை, ஜூன் 19: தஞ்சை மாவட்டத்தில் வேளாண் மக்கள் தங்களது உழவு பணிகளை செம்மையுற செயல்படுத்தும் விதமாக தஞ்சை மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் 243 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக வட்டியில்லா பயிர்க்கடனாக 2018-19ம் ஆண்டில் ரூ.252 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.254 கோடி என இலக்கை தாண்டி விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டது.இந்தாண்டு 2019-20க்கு ரூ.311 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

நாச்சியார்கோயிலில் 21ம் தேதி குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கும்பகோணம், ஜூன் 19: கும்பகோணம் தாலுகா கொத்தங்குடி ஊராட்சி நாச்சியார்கோயில் சரகத்தில் சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் வரும் 21ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து தாசில்தார் நெடுஞ்செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கும்பகோணம் தாலுகா கொத்தங்குடி ஊராட்சி நாச்சியார்கோயில் சரகத்தில் சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் வரும் 21ம் தேதி நடக்கிறது. கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்று அலுவலர்களிடம் மனு கொடுத்து பொதுமக்கள் பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: