போக்குவரத்து பாதிப்பு தீப்புகையால் பொதுமக்கள் அவதி சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலையில் 2019-20ம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கை விண்ணப்பம் 30% அதிகரிப்பு

தஞ்சை, ஜுன் 19: தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 2019-20ம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது. ஸ்ட்ரீம்-1வில் 70 விழுக்காடு இடங்களுக்கான ஒதுக்கீடு (ஜேஇஇ மெயின்) மற்றும் பிளஸ்2 ஒருங்கிணைந்த மதிப்பெண் அடிப்படையில்) பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் தெலங்கானா, ஐதராபாத், சைதன்யா ஜூனியர் கல்லூரியை சேர்ந்த மாணவர் கோவர்தன் சாய்சீனிவாஸ் 99.3235 சமன் செய்த மதிப்பெண் தரவரிசை பட்டியலில் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். சென்னை பாலவித்யா மந்திர் பள்ளியை சேர்ந்த பிரதீக் ரஞ்சன் மித்ரா, ஜேஇஇ மெயின் மற்றும் பிளஸ்2 ஒருங்கிணைந்த மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியலில் தமிழக அளவில் முதலிடரிடம் பிடித்தார். ஸ்ட்ரீம் 2வில் 30 விழுக்காடு இடங்கள் பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் சமன்படுத்தும் முறையில் தெலங்கானா கரீம் நகர் சைதன்யா கலாசாலாவை சேர்ந்த மதுபு ஹரிகா 99.7984 மதிப்பெண் பெற்று சமன்படுத்தும் முறை அடிப்படையில் முதல் தகுதியை தேசிய அளவில் பெற்றார்.விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பெறுவதற்கு கடந்த 14ம் தேதி மாலை 5 மணி வரை பெறப்பட்டு அன்றிரவு 9 மணிக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை முதல் வரும் 23ம் தேதி வரை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும். மொத்தமுள்ள 1800 இடங்களுக்கு 22,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இந்தியா முழுவதும் இருந்து சென்ற ஆண்டைவிட 30 சதவீதம் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தஞ்சை, திருச்சி மாவட்ட மாணவர்களுக்கு தலா 10 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: