நேஷனல் பார்மா மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முகாம்

தஞ்சை, ஜூன் 19: நேஷனல் பார்மா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம், அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவத்தினர் சிறப்பு மருத்துவ திட்டம் ஆகியவற்றின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட தஞ்சை நேஷனல் பார்மா மருத்துவமனையில் சிறுநீரகம், இருதயம், சிறுநீரியல் மற்றும் நரம்பு சுருட்டல் (வெரிக்கோஸ்) மருத்துவ பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மருத்துவமனை தலைவர் ஹாஜி கமால்பாட்சா முன்னிலை வகித்தார்.

சிறுநீரகவியல் துறை சிறப்பு மருத்துவர் ராஜேந்திரன், இருதய நோய் பிரிவு மருத்துவர் விஜய் ஆனந்த், சிறுநீரியல் துறை சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் செந்தில்நாதன், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் மோகன்ராஜா ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். மேலும் ரத்தம், சிறுநீர் போன்றவை மிக குறைந்த கட்டணத்தில் பரிசோதிக்கப்பட்டது. சலுகை கட்டணத்தில் மருந்துகள் வழங்கப்பட்டது.மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் முஜிபுர் ரகுமான் சிறப்புரையாற்றினார். மருத்துவமனை இயக்குனர் டாக்டர் முகமது அலி நன்றி கூறினார். இணை இயக்குனர் சிவக்குமார் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் மங்களேஸ்வரி குமரவேல் ஏற்பாடு செய்திருந்தனர். முகாமில் தஞ்சை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான நோயாளிகள் பங்கேற்றனர்.

Related Stories: