பெரம்பலூர் மாவட்டத்தில் 1,09, 382 பேருக்கு ஆம்புலன்ஸ் சேவை

பெரம்பலூர்,ஜூன்19: பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 1,09,382பேர் 108 ஆம்புலன்ஸ் சேவைகளைப் பெற் றுள்ளனர். என கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட மேலாளர் தெரிவித்தார்.பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவ மனையில் 108 ஆம்பு லன்ஸ் எனப்படும் அவசர ஊர்தி சேவை ஊழி யர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத் திற்கு, மாவட்ட மேலாளர் உதயநிதி தலைமை வகித்து பேசியதாவது :பெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை கடந்த 2008ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 13 ஆம்புலன்சு கள் இயங்கி வருகின்றன. இதில் கடந்த ஏப்ரல் மாதம் வரை மொத்தம் ஒரு லட்சத்து, 9 ஆயிரத்து, 382பேர் வரை ஆம்புலன்ஸ் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதில் பிரசவத்திற்காக தாய்மார்கள் 24 ஆயிரத்து, 319 பேரும், சாலை விபத்தில் சிக்கி யவர்கள் 19 ஆயிரத்து, 300 பேரும், பிற பல்வேறு அவசர மருத்துவத் தேவைகளுக்காக 65ஆயிரத்து, 763 பேரும் இந்த சேவைகளைப் பய ன்படுத்தியுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 11ஆண்டுகளில் பல்லா யிரக்கணக்கான விலை மதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சேவைகள் முற்றிலும் இலவச சேவை என்பதால், பொது மக்களுக் குப் பெரிதும் உதவி கரமாக இருந்து வருகிறது.

அனைத்து ஆம்புலன்சுக ளுக்கும் ஆண்ட்ராய்டு மொபைல் வழங்கப்பட்டு, ஆம்புலன்ஸ் செயல்பாடுகள் ஜிபிஎஸ் கருவிமூலம் கண்கா ணிக்கப் படுவதால், துரிதமாக செயல்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு வெகு விரைவாக உதவமுடிகிறது. மேலும் அவசர முதலுதவி தேவை யான அனைத்து மருந்து மற்றும் உபகரணங்களும் ஆம்புலன்சில் இருப்பதனால், நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் தகுந்த முதலுதவி கொடுக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்கள் பணிகளை மருத்துவப் பணிகளாக மட்டும் கருதாமல் மனிதாபிமா னத் தோடு இந்த பணிகளை செய்து வரு கிறார்கள் எனத் தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் குறைகள், நிறைகள் கேட்கப்பட்டு அதற்கான தீர்வுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது.மேலும் இந்த சேவை மேம்பாட்டுக்கான ஜிபிஎஸ் கண்கா ணிப்பின் மூலம் ஆம்புலன்ஸ் இருக்கும் இடமறிந்து, சம்பவ இடத் திற்கு அவைகள் செல்லக்கூடிய வழி த்தடங்கள் மற்றும் ஜிபிஎஸ் முறை களில் சிஸ்டம் கையாளும் முறைகள் குறித்துசெயல் விளக்கம் அளிக்கப்ப ட்டது. இதில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர் கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: