5ம் தேதிக்குள் வழங்க வலியுறுத்தல் 15ம் தேதிக்கு மேல் சம்பளம் தருவதா?

திண்டுக்கல், ஜூன் 18: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலர்களுக்கு 15ம் தேதிக்கு மேல் சம்பளம் வருகிறது. இதனை 5ம் தேதிக்குள் வழங்க வலியுறுத்தி, திண்டுக்கல் மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகராட்சியில் முறையற்ற, அதாவது பதவிக்கு பணி மூப்பு பட்டியலை சரியாக தயார் செய்யாமல் ஆளுங்கட்சியின் தலையீட்டால் வருவாய் துறை உதவியாளர் சரவணனுக்கு முறையற்ற பதவி உயர்வு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட கூட்டுறவு கடன் திருப்பத் தொகை, எல்ஐசி, எஸ்பிஐ, எப்சி, பிஎப் போன்ற தொகைகளையும், ஐடி ரிட்டன்சுக்காக பிடித்தம் செய்யப்பட்ட பணங்கள் எல்லாத்தையுமே அந்தந்த கணக்கில் கொண்டு போய் சேர்க்காமல் உள்ளனர். அதனால் பணியாளர்கள் அபராத தொகையை செலுத்த வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

பணிமூப்பு பட்டியலை வருடந்தோறும் தயார் செய்ய வேண்டும். மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் கூட நகர விரிவாக்கத்திற்காக எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த சூழலில் பணியாற்றியவர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு இல்லாமல், பல ஆண்டுகளாக ஒரே பணியில் இருக்கக்கூடிய ஒரு தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் சம்பளம் 5ம் தேதிக்குள் வழங்க வேண்டும். ஆனால் தற்போது திண்டுக்கல் மாநகராட்சி அலுவலர்களுக்கு 15ம் தேதிக்கு மேல் சம்பளம் வருகிறது. இதனை சரி செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் ரெங்கராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் விஜயராகவன், பொருளாளர் புவனேஸ்வர் முன்னிலை வகித்தனர். நிறைவாக ஆலோசகர் வில்லியம் சகாயராஜ் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர்.

Related Stories: