விலை வீழ்ச்சியால் மல்லிகையை அள்ளி சென்ற சென்ட் கம்பெனி

 வத்தலக்குண்டு, ஜூன் 18: நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ கிலோ ரூ.150க்கு விற்பனையானது. விலை வீழ்ச்சியால் சென்ட் கம்பெனியினர் அள்ளிச் சென்றனர்.ஆனி மாதம் தொடங்கியதால் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை வீழ்ச்சி அடைந்தது. வாங்க ஆளில்லாததால் சென்ட் கம்பெனிக்கு குறைந்த விலையில் விற்பனை ஆகிறது.

வைகாசி கடைசி முகூர்த்தத்தில் நிலக்கோட்டையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.300க்கு விற்றது. ஆனி தொடங்கியதில் இருந்து விலை வீழ்ச்சி அடைந்தது. நேற்று ஒரு கிலோ மல்லிகை ரூ.150க்கு விற்பனை ஆனது. நேற்று மதியம் அதுவும் விற்பனை ஆகவில்லை. சென்ட் கம்பெனியினர் ஒரு கிலோ ரூ.120க்கு பேசி அள்ளி சென்றனர். இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், வரத்து அதிகரிப்பால் மல்லிகை விலை வீழ்ந்துள்ளது. இதனால் சென்ட் கம்பெனிக்காரர்கள் அதிகம் வாங்கிச் செல்கின்றனர். திருவிழா, மூகூர்த்தம் அதிகரித்தால் விலை உயர வாய்ப்புள்ளது என்றனர்.

Related Stories: