இன்ஜினியரின் மனைவி ரயிலில் தவற விட்ட 2 பவுன் செயினை கண்டெடுத்து கொடுத்த ரயில்வே போலீசார்

தஞ்சை, ஜூன் 18: திருச்சி காட்டூர் ராஜப்பா நகரை சேர்ந்தவர் சிவராம் (35). இவர் தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா (32). இருவரும் நேற்று முன்தினம் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருவரும் திருச்சி வந்தனர். அங்கு இறங்கியதும் லாவண்யா அணிந்திருந்த 2 பவுன் செயினை காணவில்லை. இதுகுறித்து கணவர் சிவராமிடம் லாவண்யா தெரிவித்தார். இதுகுறித்து ரயில் பாதுகாப்பு போலீசாரிடம் சிவராம் புகார் செய்தார். அதன்பேரில் தஞ்சைக்கு ரயில் சென்றதும் அங்கு ரயில்வே பாதுகாப்புபடை போலீசார் லாவண்யா பயணம் செய்த முன்பதிவு பெட்டியில் ஏறி குறிப்பிட்ட இருக்கையை சோதனை செய்தனர். அப்போது இருக்கைக்கு அடியில் செயின் விழுந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து செயினை கைப்பற்றி சிவராமுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தஞ்சை சிவராம் நேற்று வந்து ரயில்வே பாதுகாப்புபடை சப் இன்ஸ்பெக்டர் மனோகரனிடம் இருந்து லாவண்யா தவறவிட்ட 2 பவுன் செயினை பெற்று கொண்டார்.

Advertising
Advertising

Related Stories: