ஆர்.என்.கண்டிகையில் கோயில் தீமிதி திருவிழா

கும்மிடிப்பூண்டி, ஜூன் 18: கும்மிடிப்பூண்டி அடுத்த ஏ.என்.குப்பம் ஊராட்சி, ஆர்.என்.கண்டிகை கிராமத்தில் உள்ள அருள்மிகு மாத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக தீமிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அத்துடன் கணபதி ஹோமம், நவச்சண்டி யாக பூஜை நடத்தப்பட்டது.பின்னர் மாத்தம்மனுக்கு அபிஷேக ஆராதனை, வடைப்பொங்கல் வைத்து படைத்தல், கூழ் ஊற்றி வழிபாடு செய்தனர். பிறகு நவச்சண்டியாக பூஜை, கலச அபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து, காப்பு கட்டி விரதமிருந்த 140 பக்தர்கள் தீமிதித்தனர். இதைத்தொடர்ந்து ஸ்ரீமாத்தம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை ஆர்.என்.கண்டிகை கிராம மக்கள் செய்திருந்தனர். கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

புழல்: சோழவரம், ஜிஎன்டி சாலையில் உள்ள எல்லையம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு தீ மிதி திருவிழா சிறப்புடன் நடைபெற்றது. கடந்த 6ம் தேதி முதல் பால்குடம் எடுத்தல், அம்மனுக்கு காப்பு கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதனை முன்னிட்டு தீ மிதி திருவிழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில் காப்புக்கட்டி விரதம் இருந்த பெண்கள் உள்பட 150 பேர் அக்னி குண்டத்தில் இறங்கினர். நள்ளிரவு அம்மனின் திருவீதியுலா நடந்தது. நேற்று காலை 7 மணியளவில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: