ஜேப்படி செய்த முதியவர் கைது

ஈரோடு, ஜூன் 14: சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா காவேரிபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனி (63). இவர், சொந்த வேலையாக நேற்று ஈரோடு வந்தார். பின்னர் பன்னீர் செல்வம் பார்க்கில் இருந்து பஸ் ஸ்டாண்ட் செல்ல டவுன் பஸ்சில் ஏறினார். பஸ் மணிக்கூண்டில் இருந்து மெதுவாக சென்றபோது பழனியின் பின்னால் நின்றிருந்த நபர், அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.200யை திருடி கொண்டு தப்ப முயன்றார். அதற்குள் சக பயணிகள் பார்த்து அந்த நபரை பிடித்து ஈரோடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் கோவை சிங்காநல்லூரை சேர்ந்த செல்வம் (55) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: