தஞ்சாவூர் மகாராஜபுரத்தில் இயங்கும் மெயின் பம்பிங் ஸ்டேஷனை ஆய்வு செய்ய வேண்டும்

கும்பகோணம், ஜூன் 14: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குனருக்கு இந்திய கம்யூனிஸ்ட் திருப்பனந்தாள் ஒன்றிய செயலளார் குமரப்பா கோரிக்கை மனு அனுப்பினார். அதில் திருவிடைமருதூர், கும்பகோணம் ஒன்றிய பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. திருவிடைமருதூர் ஒன்றியம் அய்யாநல்லூரில் மெயின் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு குழாய்கள் மூலம் குடிநீர் சொண்டு செல்லப்படுகிறது. ஆடுதுறை கூட்டு குடிநீர் திட்டம் என்ற பெயரில் மகாராஜபுரத்தில் மெயின் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு குழாய்கள் மூலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு குடிநீர் சொண்டு செல்லப்படுகிறது.

பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அமைக்கப்பட்டுள்ள மெயின் பம்பிங் ஸ்டேஷன், மோட்டார் அறைகள், குடிநீர் கொண்டு செல்லும் குழாய்கள், குழாய் வால்வுகளை பராமரிக்க போதிய பணியாளர்கள் இல்லை.ஒப்பந்த விதிகளுக்கு புறம்பாக மிக குறைந்த எண்ணிக்கையில் ஒப்பந்த ஊழியர்களை கொண்டு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து உயர்மட்ட அதிகாரிகளை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். குழாய்களில் உடைப்பு மற்றும் பழுது ஏற்பட்டால் அவற்றை உடனே சரி செய்வதற்கு போதிய ஒப்பந்த பணியாளர்கள் இல்லாத நிலையில் கூட்டு குடிநீர் திட்டத்தால் பயனில்லாத நிலை ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தின் ஒப்பந்த விதிகள் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மெயின் பம்பிங் ஸ்டேஷன், மோட்டார் அறை, குடிநீர் கொண்டு செல்லும் குழாய்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் மனுகுழாய்களில் உடைப்பு மற்றும் பழுது ஏற்பட்டால் அவற்றை உடனே சரி செய்வதற்கு போதிய ஒப்பந்த பணியாளர்கள் இல்லாத நிலையில் கூட்டு குடிநீர் திட்டத்தால் பயனில்லாத நிலை ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Related Stories: