வரி விளம்பரம் மனைவி திட்டியதால் தீக்குளித்து கணவன் தற்கொலை

கும்பகோணம், ஜூன் 14: கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் இடையாநல்லூரை சேர்ந்தவர் சிவக்குமார் (42). இவருக்கு கலையரசி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு மன் விபத்தில் சிக்கிய சிவக்குமாருக்கு காயம் ஏற்பட்டு குணமடைந்தது. ஆனால் சிவக்குமார் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலையரசி, கணவர் சிவக்குமாரிடம் தகராறு செய்து திட்டினார். இதனால் மனவேதனைடைந்த சிவக்குமார் கடந்த 5ம் தேதி மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதையறிந்த உறவினர்கள், சிவக்குமாரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். திருப்பனந்தாள் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

பெண் தற்கொலை:திருவையாறு அடுத்த மேலஉத்தமநல்லூரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மணிமேகலை (40). இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். வயிற்றுவலி அதிகமானதால் கடந்த 9ம் தேதி வாழைக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்து மயங்கினார். இதையடுத்து அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின்பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்இன்ஸ்பெக்டர் ஆர்த்தி ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: