தஞ்சாவூர் காற்று மாசுபடுதலை தடுப்பதற்கு அதிகளவில் மரக்கன்று நட வேண்டும்

பாபநாசம், ஜூன் 14: பாபநாசம் அடுத்த மணி மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினவிழா நடந்தது. பாபநாசம் கோர்ட் நீதிபதி சிவக்குமார் பங்கேற்று பேசுகையில், உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த 1974ம் ஆண்டு முதல் மே மாதம் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் நோக்கம் பூமியை பாதுகாப்பதாகும். 2019ம் ஆண்டுக்கான குறிக்கோள் காற்று மாசுபடுதலை தடுப்பதாகும். காற்று மாசுபடுவதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 6 மில்லியன் மக்கள் இறக்கின்றனர். காற்று மாசுப்படுவதன் காரணமாக இதயநோய், சுவாச நோய், கேன்சர் போன்ற நோய்களுக்கு மக்கள் ஆட்படுகின்றனர். எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாசற்ற காற்று, சுத்தமான குடிநீர், ஆரோக்கியமான வாழ்வு வாழ நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிக மரங்களை வளர்க்க வேண்டும் என்றார். பள்ளி தலைமையாசிரியர் முருகானந்தம் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தன்னார்வ சட்ட பணியாளர்கள் ராஜேந்திரன், தனசேகரன் செய்திருந்தனர்.

நீதிபதி அறிவுரை

Related Stories: