எச்சரிக்கை போர்டு வைத்தும் கொட்டப்படும் குப்பைகள் சாலையில் பரவி சுகாதார சீர்கேடு மண்ணச்சநல்லூர் கம்பெனி தெருவில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் தொற்று நோய் பரவும்: பீதியில் பொதுமக்கள்

மண்ணச்சநல்லூர், ஜூன் 13: மண்ணச்சநல்லூரில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.மண்ணச்சநல்லூரில் கம்பெனி தெருவில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் பொது பைப் லைன் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பொது பைப்லைன் மூலம் பேரூராட்சி கொள்ளிடம் கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த குடிநீரில் சாக்கடை நீரும் கலந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிவா கூறியதாவது, மண்ணச்சநல்லூரில் உள்ள கம்பெனி தெருவில் பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டிற்கு பொது பைப்லைன் உள்ளது. இந்த பைப்லைன் கழிவுநீர் வாய்க்காலை ஒட்டியே உள்ளதால் கடந்த 2 ஆண்டிற்கு முன்பு ஒருமுறை பைப்லைன் உடைந்த பிறகு அதன் அருகே மீண்டும் பைப் லைன் போடப்பட்டது. தற்போது இந்த பைப்லைன் துருப்பிடித்த நிலையில் பைப் ஓட்டை விழுந்து கழிவுநீர் குடிநீரில் கலந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாய நிலை அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து மண்ணச்சநல்லூர் பேருராட்சி அதிகாரியிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertising
Advertising

Related Stories: