கும்பகோணம் ஒழுங்குமுறை கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம் 457 குவிண்டால் விற்பனை அதிகபட்ச விலையாக ரூ.5,669 நிர்ணயம்

கும்பகோணம், ஜூன் 13: கும்பகோணத்தில் நடந்த மறைமுக பருத்தி ஏலத்தில் 457 குவிண்டால் விற்பனையானது. அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.5,669க்கு ஏலம் போனது.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இந்த ஆண்டுக்கான பருத்தி மறைமுக ஏலம் நேற்று துவங்கியது. இதில் திருநீலக்குடி, தென்னூர், வேப்பத்தூர், விளத்தூர், அகராத்தூரை சேர்ந்த 200 விவசாயிகள் 457 குவிண்டால் எடையுள்ள பருத்தியை மறைமுக ஏலத்துக்கு கொண்டு வந்தனர். சேலம், கும்பகோணம், செம்பனார்கோவில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.பின்னர் விவசாயிகள் கொண்டு வந்த பருத்திக்கு விலை நிர்ணயித்து ஏலப்பெட்டியில் வியாபாரிகள் போட்டனர். ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணி–்ப்பாளர் தாட்சாயினி முன்னிலையில் ஏலச்சீட்டுகள் விவசாயிகள் முன்னிலையில் படிக்கப்பட்டது.இதில் ஒரு குவிண்டாலுக்கு அதிகபட்ச விலையாக ரூ.5,669, சராசரி விலையாக ரூ.5,279, குறைந்தபட்ச விலையாக ரூ.4 ,400 விலை போனது. பருத்திக்கான தொகை வங்கி மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

Related Stories: