அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சதவீதம் உயர்வு

ஈரோடு, ஜூன் 13:  ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு சேர்க்கை சதவீதம் உயர்ந்துள்ளது. இதில், தற்போது வரை 1500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளும், 6ம் வகுப்பு முதல் ஆங்கில வழிக்கல்வி கொண்டு வந்ததே இதற்கு காரணம். மேலும், தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஸ்மார் கிளாஸ் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. 3 முதல் 5ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகம் வரும் 15ம் தேதிக்குள் வழங்கப்பட்டு விடும். 8ம் வகுப்பு பாட புத்தகம் வந்துவிட்டன. அதில், சில பாட பிரிவுகள் மட்டும் பற்றாக்குறை உள்ளது. அவை ஓரிரு நாளில் பெறப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும். தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை பார்க்க மாவட்டத்தில் உள்ள 186 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் செட்-டாப் பாக்ஸ் அரசு சார்பில் பெறப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்த பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் ஸ்பான்சர் மூலம் டிவி.,க்கள் வாங்கப்பட்டு விரைவில் பள்ளிகளில் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: