சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் முதல்வர் தகவல் வருவாய்த்துறை சார்பில் 14ம்தேதி 11 தாலுகாவில் சிறப்பு குறைதீர் முகாம்

திருச்சி, ஜூன் 12: திருச்சி மாவட்ட வருவாய்த்துறை சார்பில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு அங்கு வருவாய்த்துறையின் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அத்திட்டத்தின்படி வாரத்தில் ஒரு நாள் ஒரு ஊராட்சியில் வருவாய்த்துறை சார்பில் அலுவலர்கள் முகாமிட்டு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ்கள், குடும்ப அட்டை, நிலம் சம்பந்தமான பிரச்னைகள் ஆகியவற்றை அந்தந்த ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக வழங்க வழிவகை செய்யப்படுகிறது.

அதன்படி வரும் 14ம் தேதி திருச்சி கிழக்கு தாலுகாவில் உக்கடை அரியமங்கலம், திருச்சி மேற்கில் உய்யக்கொண்டான் திருமலை, திருவெறும்பூரில் குண்டூர், ரங்கத்தில் மருதாண்டாக்குறிச்சி, மணப்பாறையில் பொய்கைபட்டி, மருங்காபுரியில் செவல்பட்டி, லால்குடியில் வந்தலைக்கூடலூர், மண்ணச்சநல்லூரில் தத்தமங்கலம், முசிறியில் வாளசிராமணி, துறையூரில் சிறுநாவலூர், தொட்டியத்தில் தொட்டியம் ஆகிய கிராமங்களில் தாசில்தார் முதலான வருவாய்த்துறை அலுவலர்கள் முகாமிட்டு பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று உடனடியாக தீர்வு காண்பர். எனவே, பொதுமக்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

மாணவர்களை தக்க வைக்க போராட்டம்

திருச்சி மாவட்டத்தில் துவாக்குடியிலும், சேதுராப்பட்டியிலும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. கல்விக் கட்டணம் இலவசம் என்றாலும் இவற்றில் மாணவர்களை சேர்ப்பதற்குள் பாலிடெக்னிக் ஆசிரியர்கள் படாதபாடுபட வேண்டி உள்ளது. சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக்கில் 300 இடங்களில், 240 இடங்கள் நிரப்பப்பட்டாலும், 60க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருப்பதாக பாலிடெக்னிக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சில மாணவர்கள் தாங்கள் விரும்பிய கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைப்பதால் அங்கு சென்றுவிடுகின்றனர். இதனால் 300 இடங்களையும் நிரப்புவது சற்றே சரிமமான காரியமாக உள்ளதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

Related Stories: