சென்னை, ஜூன் 12: வெவ்வேறு இடங்களில் நடக்கும் பராமரிப்புப்பணி காரணமாக ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்திலுள்ள சிங்கபெருமாள் ேகாயில் பகுதியில் பராமரிப்புப்பணி நடக்கிறது. இதையொட்டி 12, 13, 14ம் ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் கடற்கரை ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து காலை 8.56, 9.38, 10.14, 11.2 மணிக்கு செங்கல்பட்டுக்கு புறப்படும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். செங்கல்பட்டில் இருந்து காலை 10.50, 11.50, 12.15, 1 மணிக்கு கடற்கரைக்கு புறப்பட வேண்டிய ரயில்கள் மாறாக தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இயக்கப்படும்.