மதுரை, ஜூன் 11: காளவாசல் சந்திப்பு மேம்பால பணிகள் நடப்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை காளவாசல் சாலை சந்திப்பில் மேம்பாலம் பணிகள் மற்றும் பாலத்தின் உத்திரங்கள் தூக்கி வைக்கப்படும் பணிகள் நடைபெறுகிறது. எனவே காளவாசல் சந்திப்பிலிருந்து சண்முகா தியேட்டர் வழியாக குரு தியேட்டர் சந்திப்பு நோக்கி செல்லக்கூடிய இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, இலகுரக மற்றும் கனரக வாகனங்களில் வழித்தடங்கள் இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை (20 நாட்கள்) மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சண்முகா தியேட்டர் வழியாக குரு தியேட்டர் நோக்கி செல்லும் வாகனங்கள் பைபாஸ் சாலை மூடப்படுவதால் காளவாசல் சந்திப்பு நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் அவ்வழியாக செல்ல அனுமதி இல்லை. களவாசல் சந்திப்பு வழியாக குரு தியேட்டர் சந்திப்பு நோக்கி செல்லக்கூடிய டூவீலர், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் காளவாசல் சந்திப்பு - அரசரடி சந்திப்பு - ஏஏரோடு - ஞானஒளிவுபுரம் வழியாக சென்று இடது புறம் திரும்பி டிடிரோடு வழியாக குரு தியேட்டர் சந்திப்பு நோக்கி செல்ல வேண்டும்.