அலங்காநல்லூர் ஒன்றியத்தில் தேனி எம்பி நன்றி தெரிவிப்பு

அலங்காநல்லூர், ஜூன் 11: தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் நேற்று அலங்காநல்லூர் ஒன்றியத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் அமைச்சர் ஆர்பி உதயகுமார், சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் எம்பி ரவீந்திரநாத் குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதியாக ரூ.3.5 கோடி மதிப்பில் சாத்தியார் அணை, வரத்து கால்வாய் தூர்வாரப்படும். பாலமேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் விளையும் மா, கொய்யா, பப்பாளி உள்ளிட்ட பழங்களை சேமித்து வைக்க அதிநவீன குளிர்பதன கிடங்கு கட்டிதரப்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிராதான பகுதியில் பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகம் திறக்கபடும், தேசிய ஊரகவேலைவாய்ப்பு மூலம் பதிவு செய்த அணைவருக்கும் 100 நாட்களுக்கும் குறைவில்லாமல் பணி வழங்க மத்திய, மாநில அரசுகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: