மதுரையில் பிடிஆர் பழனிவேல் ராஜன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை: அமைச்சர், எம்எல்ஏ பங்கேற்பு

 

மதுரை, மே 21: முன்னாள் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் பி.டி.ஆர் பழனிவேல்ராஜனின் நினைவு தினத்தையொட்டி மதுரை அவுட் போஸ்டில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ தலைமையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் உயர்மட்ட செயல்திட்ட குழு உறுப்பினர் பொன் முத்துராமலிங்கம், மாநில தணிக்கை குழு உறுப்பினர் வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தை வேலு, மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.கே.ஆறுமுகம், வைகை பரமன், முத்துகணேசன், செய்யது அபுதாஹிர், மாநகர் மகளிர் அணி அமைப்பாளர் சரவணபுவனேஸ்வரி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் நூர்ஜகான், இலக்கிய அணி துணை தலைவர் திராவிட மாரி, மண்டல தலைவர் பாண்டி செல்வி, பகுதி செயலாளர்கள் தவமணி, மேலமடை சித்திக், எஸ்.எஸ்.மாறன், ராதாகிருஷ்ணன், சுபாகண்ணன், வட்ட செயலாளர்கள் மகேந்திரன், காத்தவராயன், பவர்மணிகண்டன், கருப்புராஜ், முத்துமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post மதுரையில் பிடிஆர் பழனிவேல் ராஜன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை: அமைச்சர், எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: