தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் முறைகேடு பெற்றோர்கள் குற்றச்சாட்டு

மதுரை, ஜூன் 7: தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஆர்டிஇ இடஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடப்பதாக ெபற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் மதுரை மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேருவதற்கான குலுக்கல் நேற்று நடந்தது. மாவட்டத்தில் 448 பள்ளிகளில் ஆர்டிஇ அடிப்படையில் 25 சதவீத மாணவர் சேர்க்கைக்காக இவ்வாண்டு கல்வித்துறைக்கு ஆன்லைன் மூலம் 7 ஆயிரத்து 140 விண்ணப்பங்கள் வந்தன. இவற்றில் தகுதியுள்ளது என 5 ஆயிரத்து 995 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

மதுரை மாவட்டத்தில் வில்லாபுரம், ஜெய்ஹிந்துபுரம், வண்டியூர் உள்பட பல பகுதிகளில் ஆர்டிஇ சேர்க்கைக்கான குலுக்கல் நேற்று நடந்தது. இதற்கு ஏராளமான பெற்றோர், தங்களது குழந்தைகளுடன் வந்திருந்தனர். இதனால் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவ, மாணவிகளை சேர்க்க நேற்று கூட்டம் அலை மோதியது. இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், `` 25 சதவீத இடஒதுக்கீட்டில் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கவில்லை. இதில் பல முறைகேடுகள் நடக்கின்றன. முடிந்து விட்டது என ஒரே வார்த்தையில் கூறி அனுப்பி விடுகின்றனர். ஒவ்வொரு தனியார் மெட்ரிக் பள்ளியிலும் ஆர்டிஇ சேர்க்கை முறையாக நடைபெற்றதா? மாணவர்கள் முறையாக சேர்க்கப்பட்டார்களா என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும்’’ என்றனர்.

Related Stories: