தாயகம் திரும்பியோர் நலச்சங்க கிளை கூட்டம்

தஞ்சை, ஜூன் 4: தஞ்சை அண்ணா நகரில் தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி பங்குதாரர்கள் நலச்சங்கம், தாயகம் திரும்பியோர் அனைத்திந்திய நலச்சங்கம் மற்றும் ரெப்கோ வங்கி மீட்புகுழு சார்பில் மாவட்ட கிளை சங்க கூட்டம் நடந்தது.

மாவட்ட கவுரவ தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தலைவர் கோவிந்தசாமி, செயலாளர் சோமன், அமைப்பாளர் சக்திவேலு முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தாயகம் திரும்பியோருக்கு உரிமையான ரெப்கோ வங்கி நிர்வாகம் இந்திய குடியரசு தலைவரின் ஆணைக்கு எதிராகவும் சட்டத்துக்கு புறம்பாக பொதுமக்களிடமிருந்த பணம் பெறுவதும், ஆதாரம் இல்லாமல் உறுப்பினர்களை சேர்ப்பது தவறானதாகும். பி கிளாஸ் உறுப்பினர்களாக இருப்பவர்களை ஏ கிளாஸ் உறுப்பினர்களாக மாற்றுவது சட்டத்துக்கு முரணானது. ரெப்கோ வங்கியில் கடந்த காலங்களில் ஊழல் செய்தவர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது வங்கியின் நிர்வாகம், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் பி வகுப்பு உறுப்பினர்களிடமிருந்து தொடர்ந்து டெபாசிட்டுகளை வாங்கி வருவது கண்டிக்கதக்கது. தாயகம் திரும்பியோர் கூட்டுறவு நிதி மற்றும் மேலாண்மை வங்கியில் கடந்த காலங்களில் வங்கியினுடைய பண பரிவர்த்தணைகளில் நடந்துள்ள முறைகேடு தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க தாயகம் திரும்பியோர் கூட்டுறவு நிதி மற்றும் மேலாண்மை வங்கி பங்குதாரர்கள் நலச்சங்கம், தாயகம் திரும்பியோர் அனைத்திந்திய நலச்சங்கம் மற்றும் ரெப்கோ வங்கி மீட்புக்குழு தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தஞ்சை, கரூர், பெரம்பலூர், விருதுநகர், கூடலூர், தூத்துக்குடி மற்றும் இலங்கை தாயகம் திரும்பிய மக்கள், தாயகம் திரும்பியோர் கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டு வங்கியின் அங்கத்தினர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: