புதுக்குடி வடக்கு கரைமேடு கிராமத்தில் பராமரிப்பின்றி காணப்படும் சுகாதார வளாகம்

ஜெயங்கொண்டம், ஜூன் 4: புதுக்குடி வடக்கு கரைமேடு கிராமத்தில் பராமரிப்பின்றி காணப்படும் சுகாதார வளாகத்தை விரைந்து சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜெயங்கொண்டம் அடுத்த புதுக்குடி வடக்கு கரைமேடு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக 10 ஆண்டுகளுக்கு முன் மகளிர் சுகாதார வளாகம் கட்டி சுய உதவிக்குழு பாராமரிப்பில் விடப்பட்டது. 2011-2012ம் ஆண்டில் இந்த சுகாதார வளாகம் ரூ.3.3 லட்சம் மதிப்பில் பராமரிக்கபட்டது. இந்த சுகாதார வளாகம் தற்போது பராமரிக்க ஆட்களின்றி சேதமடைந்து வருகிறது. சுகாதார வளாகத்தில் கழிவறை, குளியலறை உள்ளன. தற்போது இந்த சுகாதார வளாகத்தை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்துள்ளன. பொதுமக்கள் பயன்படுத்த தண்ணீர் இல்லை. மகளிருக்கான சுகாதார வளாகத்தை யாரும் பயன்படுத்துவதில்லை. சுகாதார வளாகத்தில் முட்புதர்கள் மண்டி கிடப்பதால் பொதுமக்கள் உள்ளே செல்லவே அச்சப்படுகின்றனர். மேலும் கழிவறை பீங்கான்கள் உடைந்து கிடக்கிறது. எனவே கழிவறைகளில் உள்ள முட்புதர்களை அகற்றி உபயோகபடுத்த தண்ணீர் வசதி செய்துதர வேண்டும். உடைந்து கிடக்கும் பீங்கான், பைப்பை சரி செய்வதோடு விரைவில் பயன்பாட்டுக்கு விட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: