திருமலைக்கேணியில் சர்வ அமாவாசை விழா

நத்தம், ஜூன் 4: நத்தம் அருகே திருமலைக்கேணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி மாத சர்வ அமாவாசை விழா நேற்று நடந்தது. இதையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.  அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்தில் மழைவேண்டி கூட்டு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: