திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி கல்லுமடை பஸ் நிறுத்தம் அருகே நிழற்குடை இன்றி பயணிகள் அவதி

கரூர், மே 30: கரூர் திண்டுக்கல் சாலை கல்லுமடை பஸ் ஸ்டாப் அருகே பொதுமக்கள் நலன் கருதி நிழற்குடை அமைக்க வேண்டும்  என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.கரூர் திண்டுக்கல் சாலையில் தாந்தோணிமலை பகுதியை தாண்டியதும் கல்லுமடை பகுதி உள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வெள்ளியணை, பாளையம், குஜிலியம்பாறை, திண்டுக்கல், மணப்பாறை, உப்பிடமங்கலம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு கல்லுமடை பஸ் நிறுத்தம் அருகே நின்று பஸ் ஏறிச் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், குறிப்பிட்ட பஸ் நிறுத்தம் அருகே நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்பது இந்த பகுதியினர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. சுட்டெரிக்கும் வெயில், மழை போன்றவற்றை தாங்கிக் கொண்டு, வெட்ட வெளியில் நின்றுதான் பொதுமக்கள் பஸ் ஏறிச் சென்று வருகின்றனர். எனவே, குறிப்பிட்ட இடத்தில், பயணிகள் அமர்ந்து செல்ல நிழற்குடை அமைக்க வேண்டும் என  என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.எனவே, அதிகாரிகள் இந்த பகுதியில்  நிழற்குடை அமைக்க  வேண்டும் பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories: