ராமநாதபுரம், மே 30: ராமநாதபுரம் அரசு மருத்துவமனை ரோட்டில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. ராமநாதபுரத்திலிருந்து நகருக்குள் செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் மதுரை வழியாக பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் இவ்வழியாக செல்கின்றன. அரசு மருத்துவமனை உள்பட பல மருத்துவமனைகள் இச்சாலையில் உள்ளன. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து திரளான இஸ்லாமியர்கள் இவ்வழியாக செல்வார்கள்.