பெரம்பலூர் மாவட்டத்தில் கறவை மாடு, வெள்ளாடு இனப்பெருக்க மருத்துவ பரிசோதனை முகாம்

பெரம்பலூர், மே 29: பெரம்பலூர் மாவட்டத்தில் கறவை மாடுகள் மற்றும் வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கான இனப்பெருக்க மருத்துவ பரிசோதனை முகாம் மற்றும் குடற்புழு நீக்க முகாம் நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது. இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது: தமிழக அரசால் 2011ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி இலவச கறவை மாடுகள் மற்றும் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. இதில் வறுமை கோட்டுக்குகீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக ஒரு பயனாளிக்கு 4 வெள்ளாடுகள் செம்மறி ஆடுகள் வீதம்  வழங்கப்பட்டது.

இந்த இலவச வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டங்கள் மூலம் பயன்பெறும் பயனாளிகள் தங்கள் கால்நடைகளை கொள்முதல் செய்த பிறகு நன்கு பராமரிக்க வேண்டுமென அரசால் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலவச வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டங்கள் மூலம் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் எடை அதிகரிக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் நாளை (30ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (31ம் தேதி) ஆகிய 2 நாட்களில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் நடக்கிறது. எனவே இலவச வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகள் மட்டும் அல்லாமல் அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தி பயன்பெறலாம்.

Related Stories: