காஞ்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 5 இடங்களில் சுற்றுலா பாதுகாப்பு அமைப்பை விரிவுபடுத்த திட்டம்: பேரவையில் அமைச்சர் மதிவேந்தன் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சுற்றுலாத்துறை துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் மதிவேந்தன் கூறியிருப்பதாவது: பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் சுற்றுலா பயணிகளுக்கு தாய்மொழியில் தேவையான தகவல்களை வழங்குதல், வழிகாட்டுதல், புதிதாக வருகை தரும் இடத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகளில் உதவி செய்தல் ஆகிய சேவைகளை வழங்க சுற்றுலா பாதுகாப்பு அமைப்பானது சுற்றுலாத்துறையின் கீழ் செயல்படுகிறது. இந்த அமைப்பு தமிழ்நாட்டில் மாமல்லபுரம், உதகமண்டலம், கொடைக்கானல், ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 சுற்றுலாத் தலங்களில் செயல்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் மதிப்பீடு மற்றும் வேண்டுகோளின் அடிப்படையில் மதுரை, திருச்சி, காஞ்சிபுரம், தஞ்சாவூர் மற்றும் ஏற்காடு ஆகிய சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பாதுகாப்பு அமைப்பினை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாமல்லபுரம், கொடைக்கானல், ராமேஸ்வரம் ஆகிய சுற்றுலாத் தலங்களில் தற்போது செயல்பட்டு வரும் சுற்றுலா பாதுகாப்பு அமைப்பில் கூடுதல் பணியாளர்களை பணிநியமனம் செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post காஞ்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 5 இடங்களில் சுற்றுலா பாதுகாப்பு அமைப்பை விரிவுபடுத்த திட்டம்: பேரவையில் அமைச்சர் மதிவேந்தன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: