வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிப்பு

திருச்சி, மே 25:  வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாளையொட்டி அவரது  சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1344வது சதய (பிறந்த நாள்) விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி ஒத்தக்கடை ரவுண்டானாவில் உள்ள முத்தரையரின் உருவ சிலைக்கு பல்வேறு அமைப்புகள், கட்சிகள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் நிறுவன தலைவர் கே.கே.செல்வகுமார் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியல் வக்கீல் அணி சந்தா, இளைஞரணி வைரவேல், மாணவரணி குருமணிகண்டன், கொள்கை பரப்பு செயலாளர் தளவாய் ராஜேஷ் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிககள் கலந்துகொண்டனர்.முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து கே.கே.செல்வகுமார் தலைமையில் புனிதநீர் எடுத்து வந்து பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அபிஷேகம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது.

Related Stories: