தா.பேட்டை அருகே வயலில் பதுக்கி வைத்திருந்த 500 மது பாட்டில்கள் பறிமுதல்

தா.பேட்டை, மே 25:  தா.பேட்டை அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 500 டாஸ்மாக் மது  பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது  செய்யப்பட்டார். தா.பேட்டை அருகே கோதூர்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து முசிறி டிஎஸ்பி தமிழ்மாறன் மேற்பார்வையில் ஜெம்புநாதபுரம் காவல் நிலைய எஸ்ஐ செல்லப்பா மற்றும் போலீசார் கோதூர்பட்டியில் வயல்வெளி ஒன்றில்  500 டாஸ்மாக் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த நெடுஞ்செழியன்(46) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: