4 பேருக்கு வலைவீச்சு பூதலூர் தாலுகாவில் 30ம் தேதி ஜமாபந்தி துவக்கம்

திருக்காட்டுப்பள்ளி, மே 25:  தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகாவில் ஜமாபந்தி என்கிற 1428ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் 30ம் தேதி துவங்கி ஜூன் 6ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து பூதலூர் தாசில்தார் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பூதலூர் தாலுகாவில் வரும் 30ம் தேதி அகரப்பேட்டை சரகத்தை சேர்ந்த தோகூர்,  பாதிரகுடி, கோவிலடி, திருச்சினம்பூண்டி, மகாதேவபுரம், கச்சமங்கலம், மேகளத்தூர், அகரப்பேட்டை, ராஜகிரி, உஞ்சினி, ரங்கநாதபுரம், நேமம், பழமார்நேரி, அலமேலுபுரம் ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நடக்கிறது.31ம் தேதி திருக்காட்டுப்பள்ளி சரகத்தை சேர்ந்த விஷ்ணம்பேட்டை, விட்டலபுரம், வானராங்குடி, கூத்தூர், பவனமங்கலம், ஒன்பத்துவேலி, திருக்காட்டுப்பள்ளி, மைக்கேல்பட்டி, கண்டமங்கலம், தீட்சசமுத்திரம், ஒரத்தூர், வெங்கடசமுத்திரம் முதல் சேத்தி, வெங்கடசமுத்திரம் இரண்டாம் சேத்தி, நத்தமங்கலம், ஆற்காடு, பூதராயநல்லூர், விண்ணமங்கலம், அடஞ்சூர், அம்மையகரம், கழுமங்கலம் ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நடந்கிறது. ஜூன் 4ம் தேதி செங்கிப்பட்டி சரகத்தை சேர்ந்த சொரக்குடிப்பட்டி, வெண்டயம்பட்டி, இராயமுண்டான்பட்டி, புதுக்குடி வடபாதி, புதுக்குடி தென்பாதி, மனையேறிப்பட்டி, பாலையப்பட்டி வடக்கு, பாலையப்பட்டி தெற்கு, சானூரப்பட்டி, புதுப்பட்டி, செங்கிப்பட்டி, ஆச்சாம்பட்டி ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நடந்கிறது.

Advertising
Advertising

ஜூன் 6ம் தேதி பூதலூர் சரகத்தை சேர்ந்த இராயந்தூர், சித்திரகுடி முதன்மை, சிததிரகுடி கூடுதல், பூதலூர், கோவில்பத்து, செல்லப்பன்பேட்டை, மருதகுடி, வீரமரசன்பேட்டை, ஆவாரம்பட்டி, முத்துவீரக்கண்டியன்பட்டி, நந்தவனப்பட்டி, தொண்டராயன்பாடி, காங்கேயன்பட்டி, கோட்டரப்பட்டி, மாரநேரி, கடம்பங்குடி, இந்தளுர், சோழகம்பட்டி ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நடந்கிறது.ஜமாபந்தி நடக்கும் நாட்களில் அந்தந்த கிராம மக்கள் பட்டா மாற்றம், ஜாதிச்சான்று, இருப்பிட சான்று, வருமான சான்று, வாரிசு சான்று தொடர்பான கோரிக்கைகளை கணினியில் பதிவு செய்த ஒப்புகை ரசீதுடன் தங்களது கிராமத்துக்கான ஜமாபந்தி நடக்கும் நாட்களில் விண்ணப்பம் செய்து சான்றுகளை பெற்று கொள்ளலாம். மேலும் முதியோர் ஓய்வூதியம், இயற்கை மரண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து நிவாரண தொகை, உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்று ஆகியவை பெறவும் மனு அளிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: